
posted 27th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஏறாவூர் அஸ்ஹர் கல்லூரியில் இரத்த தான முகாம்
ஏறாவூர் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில், ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரத்தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் பங்கேற்றார்.
பெருமளவானோர் இரத்தானம் வழங்கிய நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)