இளைஞர்களின் யோசனை ஜனாதிபதியிடம் கையளிப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இளைஞர்களின் யோசனை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான COP28 மாநாட்டிற்காக இலங்கை இளையோரின் யோசனைகள் அடங்கிய Sri Lanka Youth Statement to COP28 என்ற அறிக்கை, இலங்கையின் இளம் பிரதிநிதிகள் குழுவின் பிரதானியும், இலங்கை இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் / பணிப்பாளர் நாயகமுமான பசிந்து குணரத்னவினால் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

காலநிலை அனர்த்தங்கள் மற்றும் அதன் பாதிப்புக்கள், அதற்கான தீர்வுகள் தொடர்பான 10 பரிந்துரைகளை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் விரிவான தெரிவை இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பல்வகைத் தன்மையைப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய உடனடி செயற்பாடுகள் மற்றும் பல்வேறு முக்கியமான செயற்பாடுகள் தொடர்பில் இந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மேற்பார்வையின் கீழ்,போதி மாதுறுவின் தலைமையில், பாத்திமா ஷமீலா, சந்தேவி பேர்டினேண்டோ மற்றும் தருஷி வீரசிங்க உள்ளிட்ட குழுவினரால் மேற்படி யோசனைகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

இதன்போது, இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் காலநிலை மாற்றம் தொடர்பிலான அமர்வின் போது ஆற்றிய உரைகள், இலங்கை இளையோர் சமூக சம்மேளனத்தினால், அரச பல்கலைக்கழக மாணவர்கள், தேசிய இளைஞர் மாநாட்டில் (Inaugural Local Conference of Youth) பங்கேற்றவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் மேற்படி யோசனைகளைத் தயாரிப்பதற்கு உதவியாக அமைந்திருந்தாக பசிந்து குணரத்ன ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான 28ஆவது மாநாட்டுக்கு இணையாக டிசம்பர் 02ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இளைஞர் நிகழ்ச்சியில் பசிந்து குணரத்னவால் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டது.

வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாட்டிற்கு இணையாக நடைபெற்ற "இலங்கை இளைஞர் நிகழ்ச்சி" தேசிய இளைஞர் சேவை மன்றம், ஜனாதிபதி செயலகம், காலநிலை அனர்த்தங்கள் தொடர்பான அலுவலகம், சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த இளைஞர்கள் எவ்வித நிதியத்தையும் பயன்படுத்தாமை சிறம்பசமாகும். இளைஞர்களின் யோசனைகளை என்ற ஆவணத்தில் காணலாம்.

இளைஞர்களின் யோசனை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)