
posted 1st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இந்திய உயர்ஸ்தானிகர் நயினாதீவுக்கு விஜயம்
மூன்று நாள் பயணமாக வடக்கு வந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று (30) வியாழன்நயினாதீவுக்கு வருகை தந்தார்.
அவருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
அவர், வரலாற்று பிரசித்தி பெற்ற நாகபூசனி அம்மன் ஆலயம், நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு நடத்தினார்.
நாக விகாரை விகாராதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும் அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)