
posted 4th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இந்தியாவிலிருந்து சரக்கு கப்பல் சேவை - கடற்றொழில் அமைச்சர்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சரக்கு கப்பல் சேவைகள் முன்னெடுக்கப்படுமாயின் வட மாகாணத்தில் நியாயமான விலையில் உணவுப் பொருட்களை பெற முடியும் என கிளிநொச்சியில் நேற்று (03) ஞாயிறு அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அத்துடன், புதிததாக முன்மொழியப்பட்டுள்ள கடற்றொழில் சட்ட திருத்தங்கள் மூலம் வெளிநாட்டவர்களின் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கப்படவுள்ளன என்ற கருத்துக்களில் உண்மையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாகபட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை பயணிகள் வரவு குறைவால் நிறுத்தப்பட்டது. இந்த கப்பல் சேவையை மீண்டும் ஜனவரியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)