
posted 13th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஆளுமைகளின் அடையாளம்
'ஞாயிறு தமிழன்' பத்திரிகையின் 'தமிழ்முரசு' கலை - இலக்கிய இதழில் கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளர் பாலமுனை பாறுக் 'ஆளுமைகளின் அடையாளம்' எனும் தொகுப்பாக தொடர்ச்சியாக எழுதி வந்த 50 கட்டுரைகளின் தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் பிற்பகல் 3.45 இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களது தலைமையிலும் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் முன்னிலையிலும் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தமிழ்முரசு இதழின் பொறுப்பாசிரியர் என்ற வகையில் ஜீவா சதாசிவம் நிகழ்வின் ஏற்பாட்டை செய்து வருகின்றார்.
எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்கள் , சக ஊடக நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)