வைத்தியசாலைக்கு மருந்து வகைகைள் கையளிப்பு
வைத்தியசாலைக்கு மருந்து வகைகைள் கையளிப்பு

தலைமன்னார் பகுதியில் இயங்கிவரும் மாவட்ட வைத்தியசாலைக்கு தலைமன்னார் கிராமத்தைச் சூழவுள்ள சக கிராமங்களான தலைமன்னார் மேற்கு, தலைமன்னார் பியர், தலைமன்னார் ஸ்ரேசன், கட்டுக்காரன்குடியிருப்பு, பருத்திப்பண்ணை, கீழியன்குடியிருப்பு, பாவிலுப்பட்டான் குடியிருப்பு மற்றும் நடுக்குடா ஆகிய இடங்களிலுள்ள நோயாளிகள் மருத்துவ தேவைகளுக்காக இவ் வைத்தியசாலையை நாடி வருகின்றனர்.

இவ் வைத்தியசாலைக்கு குறைந்தது தற்பொழுது நாளாந்தம் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் வெளி நோயாளர் பிரிவினில் சிகிச்சை பெற்றுவருவதை தெரிந்துள்ள நிலையில் தலைமன்னார் பங்கு கத்தோலிக்க இளைஞர்கள் மக்களிடம் சேகரித்த பணத்தில் சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதிக்குரிய அத்தியாவசிய மருந்து வகைகளை தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி மாக்கஸ் அடிகளாரின் தலைமையில் வைத்திய அதிகாரி நவ்ராஸிடம் செவ்வாய் கிழமை (27) கையளித்தனர்.

இச்சேவை தொடருமென இவ் விளைஞர் குழு தெரிவித்தது.

துயர் பகிர்வோம்

வைத்தியசாலைக்கு மருந்து வகைகைள் கையளிப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)