
posted 14th December 2022
ரயில் வேலை நிறுத்துங்கள் இங்கிலாந்தின் நாடு பூராவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும், தூர இடங்களுக்கான சேவைகளற்ற அல்லது குறைக்கப்பட்டுள்ள அல்லது மட்டுப்படுத்தப்பட்டுள்ள இக்கட்டான சூழலிலும், மற்ற புகையிரத சேவைகளான ட்றாஸ்போட் போ லன்டன் (Transport for London - TfL) சேவைகளும், பஸ் சேவைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அத்துடன், பயணிகளின் பயணங்களோ வெகுவாக்க குறைந்து காணப்படுகின்றன.
புகையிரத நிலையங்களில் அறிவித்தபடி பயணிகள் வரிசையில் நின்று ரயிலில் ஏறவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பினும் பயணிகளுக்கு அவ்வாறான கஷ்டங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இரவு 9 மணிக்குப் பின் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அவ்வாறிருப்பினும் எந்தப் பயணிகளும் அந்தந்த ரயிலினில் தவறாது பயணம் செய்யக் கூடியதாக இருந்தது.
Victoria Lineனின் சேவையானது குறைக்கப்பட்டும் மாலை 5 மணியுடன் அச்சேவையானது நிறுத்தப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
District Lineனின் சேவையானது சாதாரணமாக இருப்பினும், Central Lineனின் சேவையானது இன்று (14) துர்ரதிஷ்டவசமாக Leytonstone என்ற இடத்தில் புகையிரதப் பாதையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை அந்தந்த ஸ்ரேஷன்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால், குளிர்ச்சியான கால நிலையாலும், ரயிலினில் சூடு போடாமல், குளிர் காற்று வேலை செய்தபடியினாலும் பயணிகள் வெகுவாக அசௌகரியத்திற்குள்ளாகிய நிலை ஏற்பட்டது.
தீயணைக்கும் படைகளின் கடுமையான பணியினால் தீ விபத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் சேவைகள் சாதாரண நிலைக்குக் கொண்டுவரப்பட்டன.
பஸ் சேவைகளின் வேலை நிறுத்தமானது, இந்த மாதம், டிசம்பர், வெள்ளிக்கிழமை, 16ம், சனிக்கிழமை, 17ம் தொடங்கவுள்ளது. இவ் வேலை நிறுத்தமானது Abellio பஸ் சேவையில்தான் நடைபெறுமென்றும், Metroline சேவையானது தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.