
posted 22nd December 2022
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் 2022 ஆம் ஆண்டுக்கான வித்தகர் விருதுக்கென அம்பாறை மாட்டத்திலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் தமிழ் இலக்கிய விழாவையொட்டி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலை, இலக்கிய வாதிகளுக்கு (தெரிவு செய்யப்படும்) வித்தகர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படியே 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழாவையொட்டி தற்சமயம் அம்பாறை மாவட்டத்தில் வித்தகர் விருதுக்கென நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையைச் சேர்ந்த கவிஞர் ஏ.பி. அஸீஸ், திருக்கோவிலைச் சேர்ந்த திருமதி. ரி. தங்கமாணிக்கம், அக்கரைப்பற்றைச் சேர்ந்த என்.எல். நூர்தீன், நிந்தவூரைச் சேர்ந்த எம்.ரி. அப்துல் கபூர் ஆகிய நால்வருமே குறித்த 2022 வித்தகர் விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கில் வசிக்கின்ற அனைத்து இனங்களினதும் கலாச்சார, பண்பாட்டியல்சார் அம்சங்களையும், அடையாளப்படுத்துதல், பேணுதல், ஆவணப்படுத்துதல் போன்றகாத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதும்.
கிழக்கிலுள்ள கலைஞர்கள், எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களின் கையெழுத்துப் பிரதிகளை அச்சுருவாக்கும் காத்திரமான செயற்பாட்டை முன்னெடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)