
posted 22nd December 2022

நாம் பல மேடை பேச்சுக்களை நடாத்துவோம். ஆலோசனைகள் வழங்குவோ..ம் ஆனால் நாம் எமது பேச்சுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றோமா என்பதை நாமே எமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
நாம் எதைச் செய்தாலும் முரன்பாடுகள் உருவாகும்.. இதை தவிர்க்க முடியாது. ஆனால் முரன்பாடுகளை சமாளிக்கக்கூடிய ஆழுமை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். மறைந்த அதிபர் சைவப்புலவர் செல்லத்துரை அவர்களின் ஆழுமை பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதின் காரணம் அவரின் வாழ்வும் வாக்குமாகும். இதனால்தான் அவர் இன்றும் மதிக்கப்படுகின்றார் என யாழ் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய பழைய மாணவனும், நிதி அமைச்சின் பொது நிதித் திணைக்களம் பொதுத் திறைசேரி மேலதிக பணிப்பாளர் நாயகம் உ. சந்திரகுமாரன் தெரிவித்தார்.
இந் நூற்றாண்டு விழா கடந்த சனி , ஞாயிறு (17, 18) ஆகிய இரு தினங்கள் ஏழுர் அரங்கில் இடம்பெற்றது.
இவ் விழாவில் உ. சந்திரகுமாரன் இங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்;
இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலத்தின் நூற்றாண்டு விழாவானது இரு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.. அந்தவகையில் இன்றையத் தினம் (18) பழைய மாணவர்களின் கதம்ப நிகழ்வாக இந்த இரண்டாம் நாள் நிகழ்வு இடம்பெறுகின்றது.
இந்த பாடசாலையின் பழைய மாணவன் என்ற நிலையிலும், இப் பாடசாலையின் நலன் விரும்பியான நிலையில் நான் இங்கு சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இப் பாடசாலையின் ஆரம்பம் பாடசாலை அதிபர்களின் ஆழுமை இடம்பெயர்வுகள் பின் மிடுக்கான முன்னேற்றங்களை நாம் இங்கு கேட்டுள்ளோம்.
இங்கு படித்த மாணவர்களின் ஓழுக்கக் கட்டுப்பாடு இவர்களின் பாடவிதானத்துக்கு மேற்பட்ட செயல்பாடுகள் இவர்களின் ஆளுமைகள் இங்கு தொடர்ந்து மிளிர வேண்டும் என்ற நோக்கில் என்ற நோக்கில் இந் நூற்றாண்டு விழாவை நல் விழாவாக முன்னெடுத்துள்ளோம்.
இப் பாடசாலையில் கற்ற நாங்கள் இன்று மகுடம் சூடியவர்களாக இருக்கின்றோம் என்றால் 'வாழக்கல்வி' என்றதை நாங்கள் எங்களுக்குள்ளேயே உட்புகுத்தியமை ஆகும்.
கடந்த மற்றும் இந்நாள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெயர் மங்காவண்ணம் கட்டிக்காத்து வருவைதை நாம் அவர்களை மதிக்க வேண்டும்.
எமக்குள்ள ஆளுமையை நாம் சிந்திக்கும் போது நீண்டகால போராட்டத்திலும் இன்று நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கும் நமக்கு ஒரு முக்கிய ஆளுமை இன்று தேவைப்படுகின்றது.
இந்த பாடசாலையில் நாங்கள் கற்றபொழுது பாடசாலை சமூகம் நல்லதொரு ஆளுமை கொண்டவர்களாக எங்களை உருவாக்கியது.
கிராமிய பாடசாலைகளில் கற்பவர்கள் நல்லதொரு சூழலிலும் ஆளுமை கொண்டவர்களாகவும் அதிகமாக காணப்படுகின்றனர்.
மேல் மாகாணத்தில் இருப்பவர்களை விட வட மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் விஷேடமாக யாழ்ப்பாணம், காலி, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களும் நல்லதொரு தலைமைத்துவம் கொண்டவர்களை உருவாக்கியுள்ளது.
கிராமிய சூழலும், பண்புகளுமே இவர்களை ஆளுமையுள்ளவர்களாக உருவாக்கியுள்ளது. ஆகவே இதை நம்பியே இன்று இப் பாடசாலையை நம்பி நாம் எமது பிள்ளைகளை ஆனுப்பியுள்ளோம். இதை பொறுப்புடன் அதிபர், ஆசிரியர்கள் கையாளுவார்கள்.
இப் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைகளுக்கு மாணவர்கள் இடம்பெயர்ந்து செல்லாது இருக்க இப் பாடசாலை தொடர்ந்து சிறந்த பாடசாலை என பெயர் பொறிக்கப்பட வேண்டும்.
அயல் பாடசாலைகள் மிகவும் பிரபலயமான பாடசாலைகள்.. ஆகவே நாம் பல போட்டிகளின் மத்தியிலேயே நகர்த்த வேண்டியுள்ளது. நல்லதொரு சமூகத்தை இப் பாடசாலையின் மூலம் கொண்டு செல்ல இந்த நூற்றாண்டு களம் அமைத்துள்ளது.
மாணவனைப் பார்த்து ஆசிரியர் நேரத்துடன் பாடசாலைக்கு வா என்கின்ற போது, அந்த ஆசிரியர் நேரத்துடனே பாடசாலை வருகின்றாரா என மாணவன் கவனிக்கின்றான் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
சைவப்புலவர் செல்லத்துரை அவர்களின் ஆளுமை பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதின் காரணம் என்ன? அவரின் வாழ்வும், வாக்குமாகும். இதனால்தான் அவர் இன்றும் மதிக்கப்படுகின்றார்.
இவரின் இந்த பண்பு பாடசாலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் பாடசாலையில் அனைத்து மாணவர்களையும் மேடையேற்றி அவர்களின் மேடைக் கூச்சத்தை அகற்ற வேண்டும். பல மேடை நிகழ்வுகளை பாடசாலை முன்னெடுக்க வேண்டும். அப்பொழுது ஆளுமை மாணவர்களுக்கு உருவாக வாய்ப்பாகும்.
அரச நிதியற்ற தன்மை கொண்ட இக்காலத்தில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பால் இன்று ஒரு புதிய கட்டிடம் அமைத்ததின் நிமித்தம் இம் மண்டபம் இவ் விழாவில் சோபித்து நிற்கின்றது.
நான் நிதி அமைச்சில் கடமையாற்றுவதால் நன்கு தெரிகின்றது. இன்று அரசு கடனாளியாக இருக்கின்றபோதும் இவ் விழாவை பல மில்லியன் ரூபா செலவில் நீங்கள் இவ் விழாவை கொண்டாடுகின்றீர்கள். ஆனால் நீங்கள் கடனாளிகள் அல்ல. பழைய மாணவர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டமையால் அரசுக்கு இயலாமை இருக்கின்றது. ஆனால் மக்களுக்கு இயலுமை இருக்கின்றது. இதுதான் எமது பலம். தமிழ் மக்கள் பல சோதனைகள் கடந்து வந்தவர்கள். இதனால் இது புதியதொன்றல்ல.
இன்று இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் சர்வதேச மட்டத்தில் நல்ல உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள் என்றால் இப் பாடசாலை தந்த வரமாகும்.
இந்த மறைந்த அதிபரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி இதன் மூலம் இக் கல்லூரியின் கல்விக்கு நாம் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. விஷேடமாக ஒழுக்கமும், ஆங்கில கல்வியையும் ஊக்குவிக்க வேண்டியுள்ளது.
நாம் எதைச் செய்தாலும் முரண்பாடுகள் உருவாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் முரண்பாடுகளை சமாளிக்கக்கூடிய ஆழுமை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.
நான் பல இடங்களில் கடமையாற்றியவன். சமய பிரிவினையை உருவாக்கி அதில் குளிர் காய்ந்தவர்கள் பலர். ஆனால் ஒற்றுமை என்பது நான் இளவாலையிலேயே காண்கின்றேன். இது மாணவர்கள் மத்தியிலும், சமூகத்தின் மத்தியிலும் தொடர்ந்து காணப்படுவது..
எனது தாயாரின் கிராமத்துக்கு பெருமையாக இருக்கின்றது என சந்திரகுமாரன் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)