வழிகாட்டல் மாநாடு
வழிகாட்டல் மாநாடு

இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு ஒன்று அம்பாறை மாவட்டம், நிந்தவூரில் நடைபெறவிருக்கின்றது.

நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசியப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதிபர் ஏ.அப்துல் கபூரின் பங்களிப்புடன் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை இந்த மாநாடு நடைபெறவிருக்கின்றது.

எஸ்.எச்.எம். செய்யித் றஸ்மி மௌலானாவின் ஒழுங்கமைப்புடனும், கல்முனை வலயக் கல்விப் பணிபாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் தலைமையிலும், அல் - அஷ்ரக் கோட்போர் கூடத்தில் இந்த மாநாடு நடைபெறும்.

மாநாட்டில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. என். புள்ளநாயகம் பிரதம அதிதிகாயகக் கலந்து கொள்வார்.

மாநாட்டின் சிறப்பு அதிதியாக தமிழ் கூறும் நல்லுலகின் ஒலிபரப்பாளரும், உலக அறிவிப்பாளருமான பீ.எச். அப்துல் ஹமீத் கலந்து கொள்வதுடன் விசேட உரையும் ஆற்றுவார்.

வழிகாட்டல் மாநாடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)