
posted 9th December 2022
வடக்கு - தெற்குக்கும் இடையே உள்ள உறவு பாலத்தை மேம்படுத்தும்முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பு மாநகர சபைக்கு சென்றனர்.
இந்தப் பயணத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர், மானிப்பாய், சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)