
posted 22nd December 2022

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடளாவிய ரீதியில், மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர், பொதுமக்களினாலும், பொது அமைப்புக்களினாலும் எல்லை நிர்ணய திருத்தம் சம்பந்தமாக, தமது கட்சிக்கு வழங்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை, ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கையளித்தார்.
இதேவேளை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது என ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்தினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)