யாழ் அரச அதிபரின் பிரியாவிடையில்
யாழ் அரச அதிபரின் பிரியாவிடையில்

யாழ். மாவட்ட மக்களுக்காக சேவையாக செயலாற்ற கிடைத்ததை நான் பெரும் பாக்கியமாகதான் நினைக்கின்றேன் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலராகப் பணியாற்றி வந்த க. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், இன்றுடன் (சனி) நடைமுறைக்கு வரும் வகையில் யாழ். மாவட்ட செயலர் பதவியை தனக்கு அடுத்து வருபவருக்குக் கையளித்த்து விட்ட அதிபர்க்கு வெள்ளிக்கிழமை (30) அன்று பிரியாவிடை அளிக்கப்பட்டது.

துயர் பகிர்வோம்

மேலும், குறிப்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றமாகி வருகின்ற மாவட்ட செயலாளர்கள் யாவரும் தற்பெருமையோடும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வந்துள்ளனர். எனக்கும் இந்த மூன்று வருடங்களும் சேவையாற்றக் கிடைத்தது பல எதிர்பார்ப்புகளையே தந்துள்ளது. குறிப்பாக எமது பிரதேச செயலாளர்கள், பதவிநிலை அதிகாரிகள், இடர் அனர்த்த முகாமைத்துவம், கொரோனா தொற்று போன்ற காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களுக்கு சென்று அதனை அவதானித்து அதற்கான பரிகாரங்கள், நிவராணங்களை பெற்றுத்தந்தனர். அதற்கான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் எனைய உத்தியோகத்தர்களும் உறுதுணையை வழங்கியுள்ளமைக்கும் நன்றி செலுத்துகின்றேன்.

எனவே, எதிர்வரும் காலத்திலும். இவ்வாறு பணிகளான சேவைக்கும், எனக்கு பணித்து இருக்கும் இளைஞர் விளையாட்டு திறன் அமைச்சுடைய செயலாளர் பதவிக்குப் பக்கபலாக இருந்து செயல்படுவேன் என்றார்.

யாழ் அரச அதிபரின் பிரியாவிடையில்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)