
posted 10th December 2022
மன்னார் நுழைவாயில் பாலத்தில் அருகாமையில் வீதி ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சீமெந்து கல்லில் உந்துருளி மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (09.12.2022) காலை இடம்பெற்றுள்ளது.
தள்ளாடி பகுதியில் இருந்து மன்னார் நகர் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண், பெண் இருவருமே இவ் விபத்துக்கு உள்ளாகி பலத்த காயங்களுடன் மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்..
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் நகர போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)