
posted 30th December 2022

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் காலத்துக்குப்பிறகு சுமார் 20 வருடங்களுக்கு பின் கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் அனைத்தும் ஒன்றுகூடி கிழக்கு மாகாணத்துக்கான சம்மேளனம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்கான அங்குராற்பணக் கூட்டத்தின் போது காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் கிழக்கு மாகாண சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 3 மாவட்டங்களிலும் உள்ள சிவில் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படல் வேண்டும் என்றும்,
அவ்வாறு இல்லாமல் ஒருதலைப்பட்சமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் முஸ்லிம் மக்களுக்கான தீர்வுத்திட்ட யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதனை அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)