
posted 28th December 2022

வடக்கின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளது போல் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளை விடுவிக்க பாராளுமன்றத்தில் தூங்கும் முஸ்லிம் கட்சிகள் முய்ச்ற்சிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
வடமாகாண காணிகளை விடுவிக்க முயற்சிக்கும் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்லலாம் என தெரிகிறது.
அதே வேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் கரும்புச்செய்கை என்ற பெயரில் பலாத்காரமாக அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களை காணிகளை மீட்டெடுக்க பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் எந்த உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்ட காணிகளும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
இனியாவது இது பற்றி ஜனாதிபதியுடன் பேசுவதற்கு இக்கட்சிகளுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)