
posted 6th December 2022
“ஓமானில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகப்பட்டுள்ள எமது பெண்களை காப்பாற்று” என ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் திங்கட்கிழமை (05) கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா இலுப்பையடி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்,
- “இலங்கை பெண்கள் பாலியல் அடிமைகளா?”
- “அனைத்தையும் விற்று ஏப்பமிட்டு இப்போது எமது பெண்களின் மானத்தையும் விற்கும் மானம் கெட்ட அரசு”
- “ஓமானில் பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள எமது பெண்களை காப்பாற்று”
போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் பெண்கள், பொதுமக்கள் என பலரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்துடன், இலுப்பையடி சந்தியிலிருந்து நடைபயணமாக சென்ற போராட்டகாரர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வவுனியா காரியாலயத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். அத்துடன், அதன் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)