
posted 9th December 2022
தேசிய மட்டங்களின் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தில் பேசாலை புனித. பற்றிமா தேசிய படசாலை தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகின்றது.
அண்மையில் கொழும்பு சுகதாச விளையாட்டு மைதானத்தில் ஐந்து தினங்களாக ( 2.12..2022--6.12.2022) நடைபெற்று வந்த பாடசாலைகளுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் பேசாலை புனித பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் எஸ். தனுஷான் சார்ளஸ் இருபது வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் நீளம் பாய்தலில் 6.97 மீற்றர் தூரத்தை பாய்ந்து தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று மன்னார் மாவட்டத்துக்கும் தனது பாடசாலைக்கும் பெருமையை ஈட்டிக்கொடுத்துள்ளார்.
தனுஷான் இங்கு நடைபெற்ற முப்பாய்தல் போட்டியிலும் கலந்துகொண்டு 14.47 மீற்றர் தூரத்தையும் பாய்ந்து ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம் மாணவனை தேசிய மட்டம் வரைக்கும் இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அம் மாணவனின் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள் சி. ரூபன் பெர்னாண்டோ மற்றும் ஏ. பெனட் குரூஸ் ஆகியோர் தீவிர பயிற்சிக்கு உட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சுகதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தில் பேசாலை புனித பற்றிமா பாடசாலை மட்டுமே ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு மன்னாருக்கு பெருமையை ஈட்டிக்கொடுத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
படத்தில் வெற்றியீட்டிய மாணவனுடன் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ரூபன் பெனாண்டோவும் காணப்படுகின்றார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)