posted 28th December 2022
நத்தார் பண்டிகையை முன்னிட்டு உலகம் பூராகவும் இடம்பெறும் நத்தார் பண்டிகை விழா இம்முறையும் மன்னார் மாவட்ட செயலகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மேல் மண்டபத்தில் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கமும் கிறிஸ்தவ ஒன்றியமும் இணைந்து இவ் ஒளி விழாவை செவ்வாய்கிழமை (27) காலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சிறப்பித்தனர்.
மாவட்ட அருட்தந்தையர்கள் , மேலதிக அரசாங்க அதிபர் , திட்டமிடல் பணிப்பாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)