
posted 7th December 2022
வடக்கு மாகாண பண்பாடலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலவலகங்களின் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து பிரதேச கலாச்சார விழாவை நடாத்தியது.
இவ் விழாவானது மாந்தை மேற்கு பிரதேச செயலாளரும் இப் பகுதியின் கலாச்சார பேரவையின் தலைவருமான கனியூட் அரவிந்தறாஜ் டெனிசியஸ் தலைமையில் மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க கலாச்சார மண்டபத்தில் செவ்வாய் கிழமை (06.12.2022) இடம்பெற்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் (திருமதி) அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களும், சிறப்பு விருந்தினராக மடு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (திருமதி) இவ்வோன் எல்.எல் அவர்களும்,,கௌரவ விருந்தினர்களாக திரு. கலாபூஷணம் சபாரெட்ணம் சிவதாசன், திரு கலாபூஷணம் சந்தியாப்பிள்ளை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் ஐவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)