மதுவினால் ஏற்பட்ட தகறாறு கொலையில் முடிந்தது

தொழில் நிமித்தம் பேசாலையில் குடியிருந்தவர்கள் ஒன்றுகூடி மது அருந்திய வேளையில் ஏற்பட்ட தகராது காரணமாக இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் தாக்கப்பட்டு மரணித்ததில் மூவர் கைது ஒருவர் தலைமறைவு பொலிசார் வலைவீச்சு.

பேசாலை பகுதியில் வியாழக்கிழமை (08) இரவு இடம்பெற்ற ஒரு கொலை தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ. குணகுமார் மேற்கொண்டுள்ள மரண விசாரனையிலிருந்து தெரியவருவதாவது;

கொலை செய்யப்பட்ட கொழும்பைச் சார்ந்த சுப்பையா ஆறுமுகம் சங்கர் (வயது 40) தொடர்பாக மரண விசாரனையில் தெரியவருவதாவது;

இறந்தவர் கொழும்பு கிருலப்பனைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் கிளிநொச்சிக்கு தொழிலுக்குச் சென்ற வேளையில் அங்கு ஜெயபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்த பின் பேசாலை பகுதிக்கு தொழிலுக்கு குடும்பத்துடன் வந்து எட்டு மாதங்களாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளதாகவும், ஐந்து மாதங்களாக இறந்தவர் ஒரு மீன்வாடியில் தொழில் புரிந்து வந்துள்ளார் எனவும், சம்பவம் அன்றுக்கு முதல் நாள் மனைவி கொழும்புக்கு சென்ற பின் சம்பவம் அன்று இவருடன் தொழில் செய்யும் நபர் ஒருவர் மதுபான பாட்டிக்கு வரும்படி தொலைபேசியில் அழைப்பு விடுத்ததை இறந்தவர் தனது மனைவிக்கு தொலைபேசியில் தெரியபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது எனவும், யாழ் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் வாடகை வீட்டில் வசித்து வந்த சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இவருடன் நான்கு பேர் மதுபானம் அருந்துவதில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், அந்நேரத்தில் ஏற்பட்டு தகராறால் இறந்தவர் மது அருந்திய இடத்திலிருந்து வெளியில் வந்தபொழுது இவர் மது போத்தலால் தாக்கப்பட்ட நிலையில் வீதியில் கிடந்துள்ளார் என்றும், இச் சம்பவம் நடந்த அன்று கடும் குளிரும், காற்றும், மழையுமாக இருந்தமையால் மக்கள் நடமாட்டமும் அற்றநிலை காணப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

பின் அடுத்தநாள் (09) காலையே பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிர் மூச்சு இருந்தபோதும் அசைவற்ற தன்மையே காணப்பட்டதாகவும், வைத்திசாலைக்கு கொண்டு சென்ற பிற்பாடே இவர் இறந்ததாகவும் மரண விசாரனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபின் இவரின் உடலை இவரின் உறவினர்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக் கொலை தொடர்பாக இவருடன் வெளி இடங்களைச் சேர்ந்த மதுபோதையில் ஈடுபட்ட மூவர் சந்தேகத்தின் நிமித்தம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகிய ஒருவரை பொலிசாரால் கைது செய்வதற்கு வலை வீசியுள்ளனர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பேசாலை பொலிசார் தொடர்ந்து புலன் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுவினால் ஏற்பட்ட தகறாறு கொலையில் முடிந்தது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)