
posted 14th December 2022
யாழ் செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை வடமாகான ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாய பூர்வமாக திங்கட்கிழமை (12) ஆரம்பித்து வைத்தார்.
குளோபல் அசோசியேசன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கான நிதி அனுசரணையை வழங்கினார்கள்.
முதற்கட்டமாக பாடசாலையின் வங்கி கணக்கில் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியினை வட மாகாண ஆளுநரின் பெயரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
மேலும் குறித்த திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்துவதற்காக புலம்பெயர் வாழும் குளோபல் அசோசியேசன் பங்குதாரர்களான தர்மலிங்கம், சண்முகதாஸ், சூரிய குமாரன், சதீஷ்குமார், ராஜலிங்கம், ராஜகுமாரன் ஆகியோரின் அனுசரணையுடன் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை பாடசாலை அதிபரிடம் ஆளுநரால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து வட மாகாண ஆளுநருக்கு குளோபல் அசோசியேசன் நினைவு சின்னத்தை பாடசாலை அதிபர் வழங்கியதுடன் மாணவர்களுக்கான மூன்று வகையான மதிய சத்துணவை வடமாகாண ஆளுநர் சம்பிரதாய அபூர்வமாக மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் இராதாகிருஷ்ணன் வடமாகாண ஆளுநரின் பிரத்தியோகச் செயலாளர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)