posted 27th December 2022
18 g ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1000 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 22,23 வயதை உடைய இரு சந்தேக நபர்கள் கைது இன்று யாழ்ப்பாணம் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையில் இரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட போதே குறித்த ஐஸ் போதை மற்றிம் ஐஸ் மாத்திரைகளுடன் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த இருவரையும் மன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)