
posted 25th December 2022

உலகம் பூராகவும் கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு விழாவானது மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை பகுதியில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் பகுதியான புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் டென்மார்க்கில் ஞானக்கடமையில் ஈடுபட்டுவரும் அருட்பணி ஜோய் பர்னாந்து அடிகளார் , பேசாலை பத்திமா தேசிய பாடசாலை துணை அதிபர் அருட்பணி றெஜிகுமார் அடிகளார் (OMI), பேசாலை உதவி பங்குத் தந்தை அருட்பணி எஸ். டிசாந்தன் அடிகளார் ஆகியோர் இணைந்து நடுச்சாம திருவிழா கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)