பெற்றோரை இழந்த மாணவிக்கு கைமேல் பலன்.

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று பகுதியில் இயங்கி வரும் 'இன்ஸ்பீரிங் யுத்ஸ்' சமூக சேவை அமைப்பானது மேற்கொண்டு வரும் சமூகப் பணிகளில் ஒன்றாக கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் பெற்றோரை இழந்து வறுமையில் வாழ்ந்து வந்த சகோதரி ஒருவருக்கு கல்விக்கு கரம் கொடுக்க அக்கரைப்பற்று 'இன்ஸ்பீரிங் யுத்ஸ்' சமூக சேவை அமைப்பு முன்வந்தது

இம் மாணவிக்கு மேலதிக வகுப்புக்களை நடாத்தி 5 ம் தர போட்டிப் பரிட்சைக்கு தயார் படுத்தபட்டிருந்தது. நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த இம் மாணவி இப் பரீட்சையில் சித்தியடைந்திருந்ததைத் தொடர்ந்து இம் மாணவியை இவ் அமைப்பு பாராட்டி கௌரவிப்பு விழா நடாத்தியது.

பெற்றோரை இழந்த மாணவிக்கு கைமேல் பலன்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)