பெருமளவில் விசுவாசிகள் சூழ நடைபெற்ற புனித வெற்றிமாதாவின் வருடாந்த திருவிழா

மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 29.12.2022 அன்று பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ் விழாவானது வியாழக்கிழமை (08.) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெற்றது.

இவ் விழாவை முன்னிட்டு கடந்த ஒன்பது தினங்களாக;

< 'அன்பால் இணைவோம் கூட்டொருங்கியங்க அன்பியம் ஆவோம்'
< 'விசுவாசத்தின் உறுதி பெறும் கிறிஸ்தவ ஒருங்கியத்த வாழ்வு'
< 'தூய ஆவியானவருடைய இயல்பை எம்மில் கொண்டு வாழ கூட்டாக அழைக்கப்பட்ட பங்கு திருச்சபை நாம்'
< 'சவால்கள் நிறைந்த திருச்சபையின் விசுவாசப் பயணத்தில் ஒறுங்கிசைவோடு பயணிக்க அழைக்கப்படும் இளைஞர் யுவதிகள்'
< 'இறைவனின் சாபங்களை பேறுகளாக , வரங்களாக , ஆசீர்வாதங்களாக மாற்றும் எமது மனமாற்றம்'
< 'வாருங்கள் இயேசுவுக்கு முன்னால் கூட்டாக அமர்வோம்'
< 'கடவுளின் அன்பு மடல்கள் ஒரே கடவுளின் பிள்ளைகள் ஆவோம்'
< 'திருமண வாழ்வு ஒருமைபாட்டிற்கு இறைவன் விடுக்கும் உன்னத அழைப்பு.'
< 'இயேசுவின் அன்பு என்னை கூட்டொருங்கியமாக வலுப்படுத்துகின்றது'
< 'ஒரே குடும்பமாக எம்மை அரவணைக்கும் வெற்றி மாதா'

என்ற கருப்பொருளில் மக்கள் சிந்திக்க மறையுரைகள் ஆற்றப்பட்டன.

பெருவிழாவின் திருப்பலியைத் தொடர்ந்து திருச்சுரூப பவனி இடம்பெற்றபோது கொட்டும் மழையிலும் விசுவாசிகள் கலந்து கொண்டதுடன் ஆயரினால் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டது.

பெருமளவில் விசுவாசிகள் சூழ நடைபெற்ற புனித வெற்றிமாதாவின் வருடாந்த திருவிழா