
posted 17th December 2022
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நடத்தும் முக்கிய பரீட்சைகளுள் ஒன்றான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை 18ஆம் திகதி (ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது.
இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், இதற்காக 2894 பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
மேலும், இம்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படாதெனவும், பதிலாக பரீட்சை ஆரம்பமாகவதற்கு முன்னர் வருகைப் பதிவு ஆவணமொன்றில் பரீட்சார்த்திகளிடம் கையெழுத்துப் பெறப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர் அதிக ஆர்வம் காட்டும் பரீட்சை இதுவாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)