புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது
புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கிராமியக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/ உறுகாமம் சரஸ்வதி வித்தியாலய நூலகத்திற்கு தேவையான பெறுமதிமிக்க புத்தகங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு உரையாற்றுகையில்;

கல்வி தான் ஒருவரை உத்வேகப்படுத்தும், சிந்தனை ஆற்றலைத் தூண்டும். சிந்தனைதான் ஒருமனிதனை செயல்படத் தூண்டும். அந்த வகையில் எமது மாவட்டத்தினை கல்வி அறிவில் மேம்பட்ட ஒரு மாவட்டமாக கட்டியெழுப்பும் முகமாக பல வேலைத்திட்டங்களை மாவட்டம் பூராகவும் பரந்துபட்டு முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறு மாவட்டத்தின் கல்வித் தரத்தினை மேம்படுத்த வேண்டுமாயின் நிட்சயமாக எல்லைப்புற மற்றும் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்த வேண்டும்.

துயர் பகிர்வோம்

அவ்வாறான செயல்பாடுகளின் ஒரு அங்கமாகவே உறுகாமம் சரஸ்வதி வித்தியாலய நூலகத்திற்கு தேவையான பெறுமதிமிக்க புத்தகங்களை வழங்கிவைத்துள்ளோம்.என்றார்.

குறித்த நிகழ்வின்போது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு, பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், கிராம சேவகர் திரு. சசிதரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டு ரங்கன் உட்பட ஏனைய செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட குழு உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , மீனவர் சங்க உறுப்பினர்கள் , விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)