
posted 31st December 2022

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக நாளை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் சந்திரமௌலீசன் லலீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கலாசாலையின் அதிபராக கடமையாற்றிய ச. கருணைலிங்கம் இன்று சனிக்கிழமை 31ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் செல்கிறார். இதையடுத்து பிரதி அதிபராகக் கடமையாற்றி வந்த ச. லலீசன் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சு இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)