
posted 8th December 2022
சம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவு கலாச்சார அதிகார சபையுடன் இணைந்து நடத்திய பிரதேச கலை இலக்கிய விழா, சம்மாந்துறை அப்துல் மஜீத் ஞாபகர்த்த மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ், மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அத்துடன் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நௌஷாட், தென்கிழக்குப் பல்கலைக்கழக முதன்மைப் போராசிரியர் ரமீஸ் அப்துல்லா, பொறியிலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ. ஜெயலத், உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், கணக்காளர் ஐ.எம். பாரிஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பிரதேச கலாச்சார அதிகாரிசபை உறுப்பினர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்களெனப் பெருமளவானோர் கலந்து கொண்ட இந்த பிரதேச கலை இலக்கிய விழாவில், பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன்,
பிரதேச மற்றும் தேசிய மட்டபோட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்று விருதுகள் பெற்றோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)