பாவேந்தலின் நூல் வெளியீடு
பாவேந்தலின் நூல் வெளியீடு

பிரபல கவிஞர் பாவேந்தல் பாறூக்கின் “பாவேந்தல் பாடல்கள்” நூல் வெளியீட்டு விழா அட்டாளைச்சேனையில் சிறப்பாக நடைபெற்றது.

அட்டாளைச்சேனை (மீனோடைக்கட்டு) சக்கிமண்டபத்தில் அட்டாளைச்சேனை உதவிப்பிரதேச செயலாளர் பாத்திமா நஹீஜா முசாபிர் தலைமையில் விழா நடைபெற்றது.

பாலமுனை பிறைட் யூத் கவுன்சில் மற்றும் கலாச்சார அபிவிருத்திமையம் என்பவற்றின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ, அல் - ஹாபீழ் என். எம். அப்துல்லா பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

துயர் பகிர்வோம்

மேலும் இலக்கிய விருத்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் செ. யோகராசா, தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, பேராசிரியர் எஸ்.எம். அய்யூப் விரிவுரையாளர் எம். அப்துல்றஸாக் ஆகியோரும் கலந்து கொண்டனர்

அத்துடன் சிறப்பு விருந்தினர்கள் கௌரவ விருந்தினர்களென எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை, இலக்கியவாதிகள், பிரமுகர்களெனப் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்

தமது கவிதைப் புலமை, மூலம் தமிழ் இலக்கியப் பரப்ப்பில் பெரும் பங்களிப்பை நல்கிவரும் பாவேந்தல் பாறூக் விழாவில் அமைப்புகளால் பொன்னாடை போர்த்தியும், வாழ்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

நூலாசிரியர் பாவேந்தல் பாறூக் நூலின் முதன்மைப்பிரதிகள் மற்றும் சிறப்புப் பிரதிகளையும் வழங்கிவைத்தார்.

பாவேந்தலின் நூல் வெளியீடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)