
posted 15th December 2022
ஆயிரக்கணக்கான குழந்தைகள் பால்மா இல்லாமல் மந்த வளர்சியிலும், அத்துடன் பால்மா இன்மையால் முதியவர்கள் நோயாளர்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்;
பால்மா விலை ஏற்றத்தால் மக்கள் மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஒரு புறமும் அத்தோடு அதிகரித்த விலையால் பால்மா வாங்க முடியாதா துயர நிலையில் இன்னும் ஒரு தொகுதி மக்களும் பரிதவிக்கும் அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பால்மா ரூபா 3500ஐ தாண்டியும் சிறுவர்களுக்கான பால்மா ரூபா 1500ஐ கடந்தும் விற்பனை செய்யப்படுகின்றது. தேனீர்ச் சாலைகளில் பால்தேனீர் ரூபா 100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் குழந்தைகள் மந்த வளர்சியிலும், கல்வி கற்கும் சிறுவர்கள் காலையில் கூட பால் தேனீர் இல்லாமல் தேயிலைச் சாயத்தை பருகும் பரிதாப நிலையில் உள்ளனர். அத்துடன் முதியவர்கள், நோயாளர்கள் மிகவும் வேதனைப் படுகின்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)