பாராட்டு விழா

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி எஸ்.எப்.எம். யூசுப் (பெறோஸ்) அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழா அப்பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் எம்.ஐ.எம். கலீல் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சேவையில் 1990ம் ஆண்டு இணைந்து 32 வருடங்களுக்கு மேலான ஆசிரியச் சேவைக் காலத்துடன் பணி நிறைவுபெற்றுச் செல்லும் இவ்வாசிரியரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பணி நிறைவு பெற்ற ஆசிரியையின் கணவர் எம்.எஸ். யூசுப், அவரின் சகோதரர்களான ஓய்வு நிலை ஆசிரியர் ஏ.எம். சபீக், ஏ.எம். றபீக், அவரது பிள்ளைகள் மற்றும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மகோன்னதமான ஆசிரியப் பணிக்கு மகுடமாக செயற்பட்ட இவ்வாசிரியைக்கு இந்நிகழ்வின்போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

பாராட்டு விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)