
posted 11th December 2022
யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் பகுதியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140 வது பிறந்த நாள் விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு இந்திய யாழ் துணை தூதுவர் ரா. நடராஜன் தனது அலுவலக உத்தியோகத்தர்களுடன் சென்று 2022.12.11ந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் மலர் மாலை அணிவித்தார்.
அத்துடன் மாலை 4.30 மணிக்கு யாழ் நல்லூர் துர்காதேவி மணிமண்டபத்தில் பட்டிமன்றம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)