பளையில் தொடரும் ஆலயத் திருட்டுகள்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள இருவேறு ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர்.

பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் ஊ வருகின்ற நிலையில் அதிகளவில் ஆலயங்களிலேயே திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பளை பிரதேசத்தில் கடந்த தினங்களில் கச்சார் வெளிபிள்ளையார் ஆலயம் ஒன்றிலும் திருட்டுச்சம்பவம் பதிவாகியது. இதனையடுத்து இன்று (06)பளை தம்பகாம நெலியாய் ஆலயம் மற்றும் புலோப்பளை வைரவர் ஆலயம் என்பவனவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த திருட்டுச்சம்பவத்தில் தம்பகாம நெலியாய் ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்டு சிலையின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் ஐம்பொன் மற்றும் தகடு அம்மனின் நகை என்பன திருடப்பட்டுள்ளது.

மற்றைய ஆலயத்தில் பணம் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பளையில் தொடரும் ஆலயத் திருட்டுகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)