
posted 20th December 2022
2022 வருடத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு
குறிப்பாக கல்விக்குத் தேவையான பணவசதி குறைவான 20 மாணவர்களுக்கு
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் எடுக்கப்பட்ட முயற்சியினால் திங்கள்கிழமை (19) மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது.
இவ்வுதவியானது வெளிநாட்டிலுள்ள பெருந்தகையினரால் முன்னுவந்து அளிக்கப்பட்டது. இவ்வுதவியானது, நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும், ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன், புலேந்திரன் ஆகியோரால் 10 மாணவர்களுக்குமாக, ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் ரூபா வீதம் இருவருடங்களுக்கு வழங்கப்பட ஒழங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந் நிதி வழங்கலின் போது, செல்வம் அடைக்கலநாதனுடன், மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனும், மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜும் பங்கேற்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)