பலவகைச் செய்தித் துணுக்குகள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

துயர் பகிர்வோம்

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம் பெற்ற கஜமுக சூர சம்ஹாரத்தின் போது..


பலவகைச் செய்தித் துணுக்குகள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் இன்று (28) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவரிடமிருந்து 25 கிலோ கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

திருவெம்பாவை பாராயணம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் இன்று (28) புதன்கிழமை திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான திருவெம்பாவை பாராயணம் இராமநாதன் வீதியூடாக கலட்டி சந்தியை அடைந்து பாலசிங்கம் விடுதி ஊடாக தபால் பெட்டி சந்தி – பரமேஸ்வரா சந்தியை அடைந்து மீண்டும் பரமேஸ்வரா முன்றலில் பாராயணம் முடிவுற்றது.

இதன்போது குறித்த பகுதிகளில் உள்ள ஆலயங்களையும் தரிசித்த வண்ணம் பாராயணம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக பத்து நாட்களும் மாணவர்கள் பாராயணம் முன்னெடுக்கப்பட்டு இறுதி நாள் மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவெம்பாவை முற்றுப் பெறவுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி திருவெம்பாவையை முன்னிட்டு மார்கழி பெருவிழாவும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)