
posted 10th December 2022
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகத்தின் கல்விப் பணியைப் பாராட்டும் நிகழ்வும் "நகுலம்" மணிவிழா சிறப்பு மலர் வெளியீடும் பட்டிருப்பு தேசியப் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில்விழாக்குழுத் தலைவர் அதிபர் ரி. சபேசன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விழா நாயகி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி. மூ. கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருமான பொறியியலாளர் என். சிவலிங்கம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர் ஏ.எம்.எம். றபீக் மட்டக்களப்புவலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி. ரவி பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி. ஜெயந்திமாலா. பிரியதர்சன் பு. திவிதரன் திருமதி. தனுசியா. இராஜசேகரன். ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் சைவப் புலவர் கலாநிதி. சா. தில்லைநாதன் விழா நாயகியின் கணவர் நா. புள்ளநாயகம்ஆகியோர் பிரதம கௌரவ. சிறப்புகௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை கோட்டக்கல்லாறு மகாவித்தியாலயம், கல்முந்தன்வெளி திருவள்ளுவர் வித்தியாலயம், துறைநீலாவணை மகாவித்தியாலயம் என்பவற்றின் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிழக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் முதலாவது பெண் மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்ட விழா நாயகியைக் கௌரவிக்கும் வகையில் "நகுலம்" சிறப்புமலர் வெளியிடப்பட்டது..
இவரின் கல்விப் பணியை பாராட்டி வலயக் கல்விப் பணிப்பாளர்கள். மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் என பலர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்..

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)