பட்டிருப்பில் மணிவிழா

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் திருமதி. நகுலேஸ்வரி- புள்ளநாயகத்தின் கல்விப் பணியைப் பாராட்டும் நிகழ்வும் "நகுலம்" மணிவிழா சிறப்பு மலர் வெளியீடும் எதிர்வரும் 2022.12.08 வியாழக் கிழமை காலை 09.00 மணிக்கு பட்டிருப்பு தேசியப் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் ரி.சபேசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி. மூ. கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஜி.சுகுணன் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருமான பொறியியலாளர் என். சிவலிங்கம் கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்(நிருவாகம்) அஎஸ். மகேந்திரகுமார் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் சைவப் புலவர் கலாநிதி. சா. தில்லைநாதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் முதலாவது பெண் மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்ற பெருமையை தனதாக்கிய இவர் துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பில் மணிவிழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)