
posted 16th December 2022
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நேற்று முன்தினம் புதன் (14) காலை நாவலர் குருபூசை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் கலாசாலையில் உள்ள நாவலர் உருவச் சிலை முன்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலாசாலையின் பிரதி அதிபர் ச. லலீசன் ஆசியுரை வழங்கினார்.
ஆசிரிய மாணவர் கா. பிரசாந்த் தலைமையில் நாவலர் பற்றிய பன்முகப் பார்வை என்ற பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இதில் ஆசிரிய மாணவர் றொபேட் சுரேஷ் நாவலரின் சமூகப் பணி என்ற பொருளிலும், ஆசிரிய மாணவி எல். எம். சமீனா நாவலரின் தமிழ்ப் பணி என்ற பொருளிலும், ஆசிரிய மாணவி தேன்மொழி நாவலரின் சைவப்பணி என்ற பொருளிலும் கருத்துரைகளை வழங்கனார்கள்.
விரிவுரையாளர் கு. பாலசண்முகன் கருத்தரங்கு பற்றிய மதிப்பீட்டுரை ஆற்றினார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)