
posted 13th December 2022
தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நேற்று திங்கள் (12) மாலை 4.00 மணி தொடக்கம் நள்ளிரவு வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதற்கான ஆதரவை வழங்கும் வகையில் வவுனியா பிரதான தபால் நிலையம் நேற்று முடப்பட்டது. இதன் காரணமாக கடிதங்கள் , பொதிகள் அனுப்ப வந்த மக்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவு பெறுவதற்கு வருகை தந்த முதியவர்கள் எனப் பலரும் ஏமாற்றங்களுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)