தொடரும் அனர்த்தம்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு அனர்த்தம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

கடந்த வாரம் நிந்தவூர் கடற்கரைப் பூங்காவை அண்மித்து ஏற்பட்ட உக்கிர கடலரிப்பு அனர்த்தத்திற்கு கருங்கற்கள் போடப்பட்ட நிலையில், ஏனைய சில பகுதிககளில் கடலரிப்பு தொடர்ந்து வண்ணமுள்ளது.

நீடித்து வரும் கடல் சீற்றம் காரணமாகவே புதிது புதிதாக கடலரிப்பு தொடர்ந்த வண்ணமுள்ளன.

இந்த நிலமை நிந்தவூர்ப் பிரதேசசத்தைப் பெரிதும் பாதித்துள்ளதுடன், கரைவலை மீன்பிடித் தொழிலையும் முற்றாக ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது.

மேலும், இந்த கடலரிப்பு அனர்த்தத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் நடவடிக்ககைகளை முன்னெடுக்க கடற்றொழில் அமைச்சு மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் போன்றவை அவசரமாக முன்வரவேண்டுமென பொது மக்கள் கோருகின்றனர்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

தொடரும் அனர்த்தம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)