
posted 3rd December 2022
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ் மாவட்ட பாடசாலைகள் பெற்று சாதனையைப் பதிவு செய்தனர்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் இன்று கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சொபிசன் 4.10 மீற்ரர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், தெல்லிப்பளை மகாஜன கல்லூரியைப் பிரதிநிதித்துவ படுத்தும் கஸ்மிதன் 3.90 மீற்ரர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த இ. அபிநயன் 3.80 மீற்ரர் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)