தேசிய புகையிரதங்களும் (National Rail), பஸ்களின் வேலை நிறுத்தங்களும்

இங்கிலாந்தில் நாடு பூராவும் போக்குவரத்து வேலை நிறுத்தங்கள் திங்கள் (13) கிழமை ஆரம்பமானது.

தூர இடங்களிலிருந்து வரும் ரயில்கள் இலண்டன் மாநகரை நோக்கி வருகை இன்று 13ஆம் திகதி வெகுவாகக் குறைந்துள்ளன. வழமையான சேவைகளுடன் ஒப்பிடும் போது இச்சேவைகள் மிகவும் குறைவாகவே உள்ளதனை அவதானிக்க முடிந்தது. அதாவது சேவை நடைபெறவில்லை என்றே கூறலாம்.

இச்சேவைகளானது 14, 16, 17ஆம் திகதிகள் வரைத் தொடரவுள்ளன. இதனால், பொது மக்கள் அதிகமான அசௌகரியத்திற்குளாகி உள்ளனர். இவ்வாறான அசௌகரியத்தினைக் குறைக்கு முகமாக மற்ற ரயில் சேவைகளை (Transport for London) நிறுத்தாமல், பயணிகளுக்கும், வழமையாக ரயிலையே நம்பி தொழிலுக்காக மத்திய இலண்டன் நகரிலே வேலை செய்பவர்களின் நன்மை கருதி வழங்கி வருவது போக்குவரத்துத் துறையினைப் பாராட்டாமல் இருக்கவும் முடியாது.

அத்துடன் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டாலும், ரயில் வேலை நிறுத்தங்களின் போது பஸ் சேவைகள் தொடர வைத்துள்ளமை மிகவும் வரவேற்க்த்தக்கது.

இக்காலமானது, வெகுவாக காலநிலை மாற்றத்தினால் பலவிதமான தடங்கல்கள் போக்குவரத்தில் ஏற்பட்டாலும் கொஞ்சம் தாமதமாக நடைபெறுவது அனுசரிக்க முடியுமானதாகும்.

ரயில் வேலை நிறுத்த விபரங்கள்;

2022

செவ்வாய்க் கிழமை - 13, புதன் கிழமை 14 டிசம்பர் 2022
வெள்ளிக் கிழமை - 16, சனிக்கிழமை 17 டிசம்பர் 2022

2023

செவ்வாய்க் கிழமை - 3, புதன் கிழமை 4 - 2023
வெள்ளிக் கிழமை - 6, சனிக்கிழமை 7 டிசம்பர் 2023

பகுதியாக சேவையில்லாத TfL சேவைகளானது Bakeloo Lineம், London Overgroundமாகும். இவை தடைப்படும் திகதிகளாவன, சனிக்கிழமை 17 தொடக்கம் வெள்ளிக்கிழமை 23 டிசம்பர் 2022 நாட்களாகும்.

Elizabeth line சேவையானது குறைக்கப்பட்ட சேவைகளாகவும், 3 பிரிவுகளாகவும் ஈடுபடும்.