
posted 6th December 2022
திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளைக் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று திங்கட்கிழமை (05) யாழ்.மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் விளக்குகளைக் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டிருந்தனர்.
இதேவேளை, யாழ். நல்லூர், திருநெல்வேலி வியாபார நிலையங்களிலும், சந்தைப் பகுதியிலும் விற்பனை மும்முரமாக இடம்பெற்றது.
இதன்படி நாளை புதன்கிழமை வீடுகளில் திருக்கார்த்திகை திருநாள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)