தண்ணீருக்குள் எத்தனை கண்கள்

பிரபல உலககவிஞர் சோலைக்கிளியின் 14 ஆவது நூலான “தாண்ணீருக்குள் எத்தனை கண்கள்” கவிதை நூலின் வெளியீட்டு விழா கல்முனையில் நடைபெற்றது.

அருட் தந்தை அன்பு ராசா தலைமையில் கல்முனை ஆஷாத் பிளாசா மண்டபத்தில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவை மக்கத்தார் ஏ. மஜீத், சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இணைத் தலைமைகளாக பேராசிரியர் செ. யோகராசா, முன்னாள் பல்கலைக்கழக பதிவாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் நூலின் சமர்ப்பணப் பிரதிகளை அருட் தந்தை அன்பு ராசா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர். கே.எம்.ஏ. றஸாக், கிழக்கு ஆளுனரின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

பெருமளவான தமிழ், முஸ்லிம் இலக்கிய வாதிகள், கல்விமான்கள், பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த சோலைக்கிளியின் நூல் வெளியீட்டு விழா இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஓர் பெருவிழாவாககத் திகழ்ந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கதாக அமைந்திருந்தது.

விழாவில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், தமிழத்துறைப்த்துறைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றியதுடன்,

பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன், கிழக்கு மாகாண சபை முன்னாள் ஆளுநரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், கவிஞர் கே.எம்.ஏ. றசாக், முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர் க. குணராசா, கவிஞர் புஸ்பலதாலோகநாதன், உதவி பிரதேச செயலாளர் நஹீசா முசாபீர் தூர்ஷீனா சோலைக்கிளி ஆகியோரும் நூல்பற்றியும், நூலாசிரியரின் ஆற்றல்கள் இலக்கிய ஆளுமைகள் பற்றியும் உரையாற்றினார்.

உலகப் புகழ்பெற்ற உம்டாவிருது உட்பட சாஹித்திய விருது மற்றும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள நூலாசிரியர் சோலைக்கிளி இதுவரை பதினொரு கவிதை நூல்களையும் 3 பத்தி எழுத்து தொகுதிகளையும் வெளியிட்ட பெருமைக்குரியவரெனவும், அவரது கவிதைகள் பிறமொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பாடநூல்களிலும் இடம்பெற்றுள்ளதாகவும் விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் சூட்டினர்.

அட்டாளைச்சேனை நண்பர்கள் அமைப்பினால் நூலாசிரியர் சோலைக்கிளி விழாவில் பொன்னாடைபோர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

தண்ணீருக்குள் எத்தனை கண்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)