சோலைக்கிளி – பாவேந்தலின் நூல்கள் வெளியீடு

பிரபல உலக கவிஞர் சோலைக்கிளியின் “தண்ணீருக்குள் எத்தனை கண்கள்” கவிதை நூல்வெளியீடு நாளை 17 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனையில் இடம்பெறவிருக்கின்றது.

அருட் தந்தை அன்புராசா தலைமையில், கல்முனை ஆஷாத் பிளாசா மண்டபத்தில் இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெறும்.

மக்கத்தார் ஏ. மஜீதினால் ஆரம்பித்து வைக்கப்படும் இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீடமுகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலி வரவேற்புரை நிகழ்த்துவார்.

இணைத்தலைமைகளாக செ. யோகராசா, மன்சூர் ஏ. காதர் ஆகியோர் கலந்துகொள்வதுடன்,

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

நூலின் சமர்ப்பணப் பிரதிகளை அருட் தந்தை அன்புராசா, யூ.எல்.ஏ. அஸீஸ் கே.எம்.ஏ. ரஸாக் ஆகியோரும் பெற்றுக்கொள்வர்.

மேலும் ரமீஸ் அப்துல்லா, ரமீஸ் அபூபக்கர், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிகழ்வில் சிறப்புரைகள் ஆற்றவுமுள்ளனர்.

பஷீர் அப்துல்கையூம், ஜே. வகாப்தீன் ஆகியோர் நிகழ்வைத் தொகுத்து வழங்குவர்.

இதேவேளை பிரபல கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் “பாவேந்தல் பாடல்கள்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருக்கின்றது.

மீனோடைக்கட்டு சக்கி மண்டபத்தில், பாத்திமா நஹீமா முஷாபீர் (அட்டாளைச்சேனை, உதவி பிரதேச செயலாளர்) தலைமையில் இந்த வெளியீட்டு விழா நடைபெறும்.

விழாவில், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ. அல்ஹாபீழ் என்.எம். அப்துல்லாஹ் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

பாலமுனை கலாச்சார அபிவிருத்தி மையம், பிறைட்யூத் கவுன்சில் ஆகியவற்றின் அனுசரணையுடன் விழா நடைபெறவுள்ளது.

சோலைக்கிளி – பாவேந்தலின் நூல்கள் வெளியீடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)