
posted 22nd December 2022

2022ம் ஆண்டு இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் சின்னமாக ஒட்டகம் தேர்தல் ஆணையகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
இறைவனின் ஆச்சயர்மான படைப்பான ஒட்டகத்தை நாம் இப்போது எமது கட்சியின் சின்னமாக கட்டிப்போட்டுள்ளோம்.
17 வருட கால அரசியல் செயற்பாடு கட்சியை பதிய கை கொடுத்தது. எல்லாம் வல்ல இறைவனுக்கே முதல் நன்றி என தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கு நேர்மையான அரசியல் சக்தியாக எமது கட்சி தொடர்ந்தும் செயற்படும் என தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம் சமூகத்தில் உள்ள கட்சிகளின் பொய், ஏமாற்று, ஊழல், பணம் கொட்டுதல் காரணமாக சமூகம் அரசியலில் வெறுப்படைந்துள்ள நிலையில் எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி சமூகத்துக்கு மாற்றீடான கட்சியாக செயல்படும் என்றார்.
அரசியலில் உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை என்பதே எமது கட்சியின் கொள்கையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)