
posted 22nd December 2022
எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி அக்கரைபற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர்,
தமது எண்ணக்கருவிலான “பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் கீழ் பெறுமதிமிக்க மருத்துவ உபகரணங்களை வைத்தியசாலைக்கு கையளிக்கவுள்ளார்.
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாலும் செய்ய முடியும் என்பதை, தமது பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் மூலம் நாடளவிய ரீதியில் செய்து நிரூபித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் வருகையை கட்சி வேறுபாடுகளுக்கப்பால் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
நாட்டின் நாலாபுறமுமுள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகளுக்கு மில்லியன் கணக்கிலான உதவிகளை அள்ளிவழங்கிவரும் சஜித்தின் பிரபஞ்சம் வேலைத்திட்டம் பெரும் பாராட்டுக்களை மக்களிடம் பெற்று வருகின்றது.
இந்த வேலைத்திட்டம் விசேடமாக வடக்கு, கிழக்கிற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)