
posted 18th December 2022
சங்குவேலியில் வீதியில் குப்பைகளும், விலங்குகளின் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதால் அவ் வீதியால் பயணம் செய்பவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
சண்டிலிப்பாயில் இருந்து உடுவிலுக்கு செல்லும் பிரதான வீதியாக இந்த வீதியே காணப்படுகிறது.
இந்த வீதியில் இதற்கு முன்னரும் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதாகவும் இது குறித்து குறித்த வட்டாரத்திற்கு பொறுப்பான பிரதேச சபையின் உறுப்பினர் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்திற்கு அருகில் விவசாய நிலங்களும் காணப்படுவதால் இவ்வாறான, சூழலுக்கு ஒவ்வாத செயற்பாடு விவசாய நிலங்களையும் பாதிக்கும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)